“நதியில்லாத ஓடம்”

ஓடம் தண்ணீரில் மிதக்கிறது. பிரபஞ்சம் பெருவெயயில் மிதக்கிறது. இந்த ஒற்றுமையில் ஒரு வேற்றுமையும் உண்டு. தண்ணீர் ஓடமாவதில்லை; ஆனால் பெருவெயயின் ஒரு சிறுபகுதிதான் பிரபஞ்சமாகியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத பெருவெளியின் ஒரு சின்னஞ்சிறு பகுதி, தற்சுழற்சியினால் ஒரு துகளாக  உருமாறி, அவ்வாறு உருமாறிய கோடானகோடி துகள்கள் சேர்ந்து விண்ணாகி, விண்களின் சேர்க்கையினால் வெவ்வேறு பௌதீக அமைப்புகள் உருவாகி, அந்த அமைப்புகள் சேர்ந்து நட்சத்திரங்கள் உருவாகி விட்டன. ஒரு நட்சத்திரத்தின் தற்சுழற்சி வேகத்தால், அதனிலிருறிது தெறித்து சிதறிய பகுதிகள் அதனை சுற்றிவருகிற கிரகங்களாக மாறியிருக்கின்றன. அந்த கிரகங்களில் ஒன்றுதான் நமது பூமி. பூமியை விளைநிலமாகக் கொண்டு எழுந்தவைகள்தான் தாவரம் மற்றும் உயிரிணங்கள் எல்லாம். அனைத்துக்கும் மூலம் பெருவெளியே. மூலத்தை தேவன் என்றால் தேவன் ஒருவனே ஆவான்.

கண்ணுக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றியிருக்கிற பெருவெளிதான், நாம் பார்த்து தொட்டு உறவாடுகிற அனைத்துமாக மாறியிருக்கிறது. அதனுடைய பேரறிவுதான் ஒவ்வொரு ஜீவனிலும் அறிவாக இருந்து அந்தத ஜீவனின் உடல் அமைப்புக்குத் தக்கவாறும் அதன் கர்மபதிவுகளுக்குத் தக்கவாறும் செயல்படுகிறது. பெருவெளியில் அடக்கமாக இருக்கும் பேராற்றல்தான் அந்தந்த ஜீவனுடைய ஆற்றலாகவும் வந்து செயல்படுகிறது. உலகிலுள்ள அனைவரும் ஒரே மூலத்திலிருறந்து வருவதால் நாம் அனைவரும் ஒரே குலத்தை சேர்ன்தவர்கள்தான். ஆகவே துணின்துரைப்போம் ஒன்றே குலம்; ஒருவனே தேவன்.

பிரபஞ்சத்தை ஆராய்கிற இன்றைய விஞ்ஞானம், பிரபஞ்சத்தை தன்னில் மிதக்கவிட்டுக் கொண்டிருக்கும் பெருவெயயைப் பற்றி பேசுவதில்லை; பிரபஞ்சத்தை நதியில்லாத ஓடமாகப் பார்க்கிறது. பிரபஞ்சத்தின் அடித்தளத்தைப் பற்றிப் பேசும் தத்துவங்கள் கண்ணுக்குத் தெரியாத அந்த ஆதியான அடித்தளம் எப்படி கண்ணுக்குத் தெரிகிற அமைப்புகளாக மாறியது என்று சொல்லத் தெரியாமல் தத்தளிக்கின்றன.

ஒவ்வொரு விஞ்ஞானிக்குப் பிறகும் தொழில் நுட்பம் பெருகி புதிய புதிய கருவிகள் வந்து நமது வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியது விஞ்ஞானத்தின் பெருமையென்றாலும்,

“சூரியன் வருவது யாராலே?

சன்திரன் திரிவது எவராலே

காரிருள் வானில் மின்மினிப்போல்

கண்ணிற்படுவன அவை என்ன?

யாரிதற்கெல்லாம் அதிகாரி?

என்ற நாமக்கல் கவிஞரின் கேள்விக்கும்

“பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை

கட்டிவைத்தவன் யாரடா-அவை

எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்

சோறுபோட்டவன் யாரடா”

என்ற கவிஞர் கண்ணதாசனின் கேள்விக்கும் இன்றைய விஞ்ஞானத்தில் விடை இல்லை என்பதும் உண்மைதானே.

மனிதர்களை உதிரிப்பூக்களாகப் பார்க்கும் இன்றைய விஞ்ஞானத்தில் மனிதர்களை ஒரே மாலையின் வெவ்வேறு கன்னிகளாகவும், கன்னிகளை இனைக்கும் நூலாக ஓடுகின்ற பெருவெளியின் பேரறிவை உணரும் பக்குவமுமில்லை என்பது விஞ்ஞானத்திலுள்ள குறைபாடுதானே.

ஆதியை உணர்த்த உலகெங்கும் வறித மெṁஞ்ஞானம், ஆதிக்கு வெவ்வேறு பெயரைக் கொடுத்து, தான் கொடுத்த பெயரை வைத்து மனிதர்களை குழு குழுவாகப் பிரித்து, தான் கொடுத்த பெயர்தான் உண்மை என்ற முனைப்பில் குழுக்களுக்கிடையே பகைமையை வளர்த்தது மெṁஞ்ஞானத்தில் நிகழ்ந்த பாவங்கள்தானே!  ஆதியைவிட  அன்த  ஆதிக்கு  தான்  கொடுத்த  பெயர்தான் பிரதானம் என்று நினைக்க ஆரம்பித்தபோது குழுக்களுக்கிடையே பகைமை உருவாகி காலத்தால் மேலும் மேலும் பெருகலாயிற்று. ஒவ்வொரு மெய்ஞ்ஞானிக்குப் பிறகும் மதம் என்ற பெயரில் புதுப்புது குழுக்கள் உருவாகின. புதிய புதிய குழுக்களால் பகைமைத் தீ மேலும் மேலும் பெருகியதை சரித்திரக் காட்சிகளாக நாம் பார்க்கதானே செய்கிறோம். இன்றும் கூட இமயமலையிலும் இஸ்ரேலைச் சுற்றிலும் மதங்கள் மூட்டிய தீதானே மள, மளவென்று எரிகிறது.

“தெய்வம் பலப்பல சொல்லி

பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்

உய்வதனைத்திலும் ஒன்றாய் – எங்கும்

ஓர் பொருளானது தெṁவம்”.

என்ற பாரதியின் கருத்தை மறந்த ஞானிகள்தானே இன்று ஒவ்வொரு நாட்டிலும் பெருகிவிட்டார்கள்.

பிரபஞ்சத்தின் அடித்தளமாகிய பெருவெளியைப் பற்றி அறிய முற்படுகிற ஒரு புதிய விஞ்ஞானத்தையும்  அனைவரையும் அன்பினால் இணைக்கும் ஒரு தர்க்கரீதியான தத்துவத்தை உருவாக்குவதிலும் வேதாத்திரி மகரிஷி தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அவரது பாதையில் பேரளம் வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமம் செயல்பட்டு வருகிறது.

இன்றைய விஞ்ஞானத்தின் அறியாமையையும் இன்றைய மெய்ஞ்ஞானத்தில்  நிகழ்ன்து வரும் பாவச்செயல்களையும் போக்குவது அறிஞர் பெருமக்களின் கடமையாகும். இந்தக் கடமை நிறைவேறும்போதுதான் நாம் கரைசேரும் காலம் வரும். அதுவரை சாதிகளும் மதங்களும் தலைவிரித்தாடும். நாட்டுக்கு நாடு கலவரங்கள் வெடிக்கும். ஆறாத காயங்களால் மனக்கவலைகள்தான் மிஞ்சும். மேற்கில் தோன்றும் உதயமாகத்தான் உலக அமைதி இருக்கும்.

Scroll to Top